கல்விச் சேவைக்குழு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 57(1) உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் இல 1989/29 மற்றும் 2016.10.19 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்விச் சேவைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இல 1989/29 மற்றும் 2016.10.10, இல 1997/07 மற்றும் 2016.11.07 மற்றும் இல 2014/3 மற்றும் 2017.04.11 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் கையளிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இல 2014/3 மற்றும் 2017.04.11 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2017.04.07 ஆம் திகதி முதல் கல்விச் சேவைக்குழுவினால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சாதாரண ஓய்வுபெறுகை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் இல PSC/EST/02-03/05/2016-SUB மற்றும் 2019.08.05 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கல்விச் சேவைக்குழுவின் செயற்பாடுகள்
இல 2014/3 மற்றும் 2017.04.11 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கல்விச் சேவைக்குழுவினால் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- அனுமதிக்கப்பட்ட சேவை பிரமாணக் குறிப்புக்கள் / ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு, சேவை நிரந்தரமாக்கல், சேவை முடிவுறுத்தல், முன்னர் வகித்த பதவிக்கு மீள அனுப்புதல், பதில் கடமை / கடமை நிறைவேற்றல் அடிப்படையிலான நியமனம், விடுவித்தல் (நிரந்தர / தற்காலிக), பதவி இராஜினாம செய்தல், பதவி வெறிதாக்கல் அறிவித்தல்களுக்கு எதிரான மேன்முறையீடுகளை பரிசீலனைக்கு எடுத்தல், சேவைக்கு / பதவிக்கு மீண்டும் நியமித்தல், ஓய்வு பெறச்செய்தல் (சாதாரண ஓய்வுபெறுகை தவிர்ந்த) மற்றும் ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவைக்கு அமர்த்தல்.
- அனுமதிக்கப்பட்ட சேவை பிரமாணக் குறிப்புக்கள் / ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்குதல் (ஒரு தரத்திலிருந்து இன்னொரு தரத்திற்கு / சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில்)
- வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பாக நிவாரணம் வழங்குதல்.
- கல்விச் சேவைக்குழுவின் விடயப் பரப்புக்குள் வரக்கூடிய உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையவாறு தாபன விதிக்கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் செய்தல்.
- 2016 இல 12 எனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஏற்புடைய நடவடிக்கைகள்.
Members
![]() |
திரு. ஜீ.எஸ். விதானகே தவிசாளர் |
![]() |
கலாநிதி. திருமதி. தமிதா டி சொய்சா உறுப்பினர் |
![]() |
திரு. எஸ்.யூ. விஜேரத்ன உறுப்பினர் |
![]() |
திரு. ஏ.டபிள்யூ.ஆர். விமலவீர - செயலாளர் |