முறையீட்டுப் பிரிவு

 

பதவிநிலை தரத்தைச் சாராத உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கல் ஆகியவற்றிற்கான அதிகாரங்கள்  02.07.2003ஆந் திகதிய 1295/26ஆம் இலக்க   அரசாங்க வர்த்தமானி இன் மூலம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.  இணைந்த சேவைகளில் உள்ள பதவிநிலைத்தரத்தைச் சாராத உத்தியோகத்தர்கள் தொடர்பில், அவ்வாறான அதிகாரங்கள் இணைந்த சேவைகளின் பணிப்பாளர் நாயகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளன..

அரசியல் அமைப்பின் 17வது திருத்தம் 58(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் யாராவது ஒரு அரச உத்தியோகத்தர் அவர் /அவள் தொடர்பில் ஒரு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கட்டளைகளுக்கு எதிராக அல்லது யாராவது ஒரு அரச உத்தியோகத்தர் உறுப்புரை 56(1) அல்லது உறுப்புரை 57(1) இன் கீழ் மேன்முறையீடு செய்யவும் உரிமையைப் பெற்றுள்ளனர் 17வது திருத்தம்..

மேற்படி பொறுப்புகள் கையளிக்கப்பட்ட அதிகாரிகளின் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பதவிநிலைத்தரத்தைச் சாராத உத்தியோகத்தர்களின் சகல முறையீடுகளையும் மேன்முறையீட்டுப் பிரிவு கையாளும்.  இவற்றிற்கு மேலதிகமாக நிருவாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறையீடுகள் சம்பந்தமாகவும் மேலும் மேற்படி பணிகள் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைகளுக்கு/ தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆகியவற்றையும் மேன்முறையீட்டுப் பிரிவு கையாளும்.