ஒழுக்காற்றுப் பிரிவு
தாபனக் கோவையின் அத்தியாயம் XLVIII முதலாம் நிரலின் கீழ் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்கான பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று சம்பந்தமான நடவடிக்கைகளை கையாள்வதற்கான அதிகாரத்தை அரசாங்க சேவை ஆணைக்குழு தன்னகத்தே கொண்டுள்ளது.
அதைத்தவிர அரசாங்க சேவை ஆணைக்குழுவானது தாபனக் கோவையின் தொகுதி II அத்தியாயம் XLVIII இன் 2ஆம் நிரலில் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்கான பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று சம்பந்தமான நடவடிக்கைகளை கையாள்வதற்கான முறையீட்டு அதிகாரியாக செயற்படுகின்றது. (மேற்கூறப்பட்ட குற்றங்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான அதிகாரம் உரிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு மேற்கூறப்பட்ட அதிகாரங்களையும், செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கு ஒழுக்காற்றுக் கிளையானது கீழ்வரும் விடயங்களை கையாளுகின்றது:
- உரிய அமைச்சுக்களின் செலாளர்கள் நிறுவனத் தலைவர்கள் திணைக்களத் தலைவர்களால் நடாத்தப்படும் ஆரம்பகட்ட விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் (நிறுவன அதிகாரங்கள்);
- தாபனக் கோவை அத்தியாயம்XLVIII இன் பிரிவு 33ன் கீழ் பொதுத் திறமையின்மைக்காக இளைப்பாறல் மற்றும் ஓய்வூதிய பிரமாணக்குறிப்பின் பிரிவு 12இன் கீழ் ஓய்வு பெறச் செய்தல்
- முறையான ஒழுக்காற்று நடவடிக்கை: குற்றப்பத்திரிகை விநியோகித்தல், விசாரணை அதிகாரி, பாதுகாக்கும் அதிகாரி, மற்றும், வாதி தரப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல், முறையான ஒழுக்காற்று விசாரணைகளில் பெற்றப்பட்ட தகவல்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட விபரிப்புக்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு அவரை விடுவித்தல் அல்லது தேவையான தண்டனைகளை வழங்குதல்.
- விசாரணை அதிகாரிகளின் குழுவை பராமரித்தல் மற்றும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்குதல்;
- தாபனக் கோவையின்; அத்தியாயம் XLVIII இன் இரண்டாம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவமுள்ள அதிகாரியினால் பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான முறையீடுகள் பற்றிய நடவடிக்கைகள்.
- பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்ட நிருவாக அதிகாரிகளினால் விநியோகிக்கப்பட்ட பதவி வெறிதாக்கல் (VOP) அறிவிப்புக்கள் சம்பந்தமான முறையீடுகள் பற்றிய நடவடிக்கைகள்.
- மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் சம்பந்தமாக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைகள் அல்லது தீர்மானங்களுக்கெதிராக உயர் நீதிமன்றங்கள் மற்றும் நிருவாக முறையீட்டு நியாய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகள் சம்பந்தமான விடயங்கள்.