தாபனப் பிரிவு
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 61(ஆ)ஆம் உறுப்புரையின் பிரகாரம் பொதுச் சேவை தொடர்பான அனைத்து சட்டங்களும் நிபந்தனைகளும் மற்றும் செயற்பாடுகளும் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் (17ஆம் திருத்தம்), மேற்படி அதிகாரங்களையும் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதில் ஆணைக்குழுவுக்கு வசதி செய்யும் பொருட்டு பின்வரும் விடயங்களை கையாள்வதற்காக 15.11.2008இல் தாபனப்பிரிவு தாபிக்கப்பட்டது.
- அதிகாரங்கள், பொறுப்புக்கள், அதிகாரப்பகிர்வு மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கருமங்கள் தொடர்பான விடயங்கள்
- அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயல்முறை சட்ட திட்டங்களை உருவாக்குதலும் திருத்துதலும் மற்றும் வெளியிடலும்
- அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயல்முறை சட்டவிதிகளின் அடிப்படையில் வழிகாட்டல்களைத் தயாரித்தலும் தெரிந்து உருவாக்கிய நிகழ்ச்சிகளை நடாத்துதலும்
- அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணக் குறிப்பின் திருத்தங்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்களை விரிவாக்கல்.
- சேவை பிரமாணக் குறிப்பு ஏற்பாடுகள், ஆட்சேர்ப்புத் திட்டங்கள் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றில் இருந்து செயல்முறை சட்டவிதிகளை வேறாக்கல்
- செயல்முறை சட்டவிதிகளுக்கு உட்படாத விதிகளை விளக்குதல்
- அரச சேவை மீதான தரவுகளை விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் மேலும் தகவல்களை பரவலாக்குதல்
- வினைத்திறன்காண் தடைப் பரீட்சையையும் மொழித் தேர்ச்சி பரீட்சையையும் நடத்துவதற்கான செயற்றிட்டத்தை உருவாக்குவதும் அச் செயல் திட்டத்திலிருந்து வேறுபடும் விடயங்கள்
- வருடாந்த இடமாற்றத் திட்டங்களுக்குரிய அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள்
- மேற்கூறப்பட்ட அசேஆவின் தீர்மானம் கட்டளைகளுக்கெதிராக மேல் நீதிமன்றங்களில் மற்றும் நிருவாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டுக்கு எதிரான நடவடிக்கைகள்