அறிமுகம்
செயல்நோக்கு
தேசத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் அரசாங்க சேவை.
செயற்பணி
வினைத்திறன்மிக்க, ஒழுங்குமுறையான அரசாங்க சேவையை ஏற்படுத்தி விருத்தி செய்வதன் மூலம் பாரபட்சமற்ற, பகிரங்கத்தன்மையுள்ள, நிலையான சேவையை மக்களுக்கு வழங்கல்
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் குறிக்கோள்கள்
- அரசாங்க சேவைக்கான நியமனங்கள், பதவியுயர்வுகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பாக உள்ள நியமங்கள், கொள்கைகள், வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் செயற்பட்டு, மனித வளத்தின் வினைத்திறனையும் பயனுறுதியையும் உருவாக்கி, மேம்படுத்தி, நீடித்து நிலைக்கச் செய்தல்.
- அரசாங்க சேவையின் தொடர்ந்தேர்ச்சியான முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டிற்கு துணைபுரியும் வகையில் மாறும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப கூருணர்வுடன் செயற்படுதல்.
- தத்துவங்கள் கையளிக்கப்பட்ட அதிகாரிகளின் கட்டளைகளினால் அதிருப்தியடையும் அரசாங்க அலுலவர்களின் மனக்குறைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் விசாரித்து நியாயமானதும் சரியானதுமான தீர்மானங்களை வழங்குதல்.
- ஊக்கம் மற்றும் தொழில் திருப்தியின் ஊடாக மிகவும் பொருத்தமான அலுவலர்களை சேவையில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், தனிப்பட்டவர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பல்வேறு தரங்களில் அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்குச் சந்தர்ப்பமளிப்பதன் மூலம் அரசாங்க அலுவலர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தனிப்பட்ட தொழில் முன்னேற்றப் பாதைகளை உருவாக்குதல்.
- தொழில் ஒழுக்கங்களை ஏற்று நடக்கக்கூடிய துர்நடத்தைகள் அற்ற ஒழுக்கமுள்ள அரசாங்க அலுவலரை உருவாக்குதல்.