நியமனப் பிரிவு
இல 1955/22 மற்றும் 2016.02.25 ஆம் திகதிய அதி விசேடமான வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்ட இல 1941/41 மற்றும் 2015.11.20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மற்றும் 1989/29 மற்றும் 2016.01.29, 1990/24 மற்றும் 2016.10.27, 1992/7 மற்றும் 2016.11.07 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசாங்க சேவை ஆணைக்குழுவினது தத்துவங்கள் கையளிக்கப்படாத அரசாங்க உத்தியோகத்தர்களின் (அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள், நீதிச் சேவை உத்தியோகத்தர்கள் நீங்கலாக) நியமனங்கள் தொடர்பிலான பின்வரும் பணிகள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நியமனப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றது.
செயற்பாடுகள்
- அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்புகள் / ஆட்சேர்ப்புத் திட்டங்கள்/ பதவி உயர்வுத் திட்டங்களின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்தல்.
- புதிய சேவைப் பிரமாணக் குறிப்புகள் / பதவி உயர்வுத் திட்டங்களுக்கு உள்ளீர்ப்புச்செய்தல்.
- தகுதிகூர் நிலைக் காலத்தின் / பதில் கடமைக் காலத்தின் இறுதியில் சேவையில் நிரந்தரமாக்கல்/ சேவையை முடிவுறுத்தல்.
- முதலில் வகித்த பதவிக்கு மீள அனுப்புதல்.
- பதில் கடமை /கடமைகளை நிறைவேற்றும் அடிப்படையில் நியமித்தலுக்கு தழுவல் அங்கீகாரத்தை வழங்குதல்.
- அரசாங்க சேவையிலிருந்து நிரந்தர / தற்காலிக அடிப்படையில் விடுவித்தல்.
- ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல்.
- சேவையிலிருந்து இராஜினாமாச் செய்தல்.
- சேவைக்கு / பதவிக்கு மீள நியமித்தல்.
- ஓய்வுபெறச் செய்தல் (அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 30/88 பிரகாரம், கட்டாய, மருத்துவ காரணிகள் மீது)
- ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் அமர்த்தல்.
- சேவைப் பிரமாணக் குறிப்புகளில் அட்டவணைப்படுத்தப்பட்ட பதவிகளுக்கு (ஏற்புடைய சந்தர்ப்பங்களில்) நியமித்தல்.
- வினைத்திறன்காண் தடைதாண்டல் நிவாரணம் வழங்குதல்.
- மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கட்டளைகள் / தீர்மானங்களுக்கு எதிராக நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு மற்றும் உயர் நீதிமன்றத்தில் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு ஏற்புடைய அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கைகளை தயாரித்தல் / வழங்குதல் மற்றும் ஒத்துழைத்தல்.
- மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு ஏற்புடையதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, ஒம்புஸ்மனிடம் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகளுக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் / வழங்குதல் மற்றும் பொதுமனுக்குழுவில் ஆஜராகுதல்.
- சுகாதார சேவைக்குழு மற்றும் கல்விச் சேவைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
- நியமனங்களுக்கு ஏற்புடையதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.