இல்லம் எம்மைப்பற்றி வரலாறு
Decrease font size  Default font size  Increase font size 
  • default color
  • cyan color
  • green color

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வரலாற்றுப் பின்னணி

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பொதுச் சேவைக்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செயல்படுத்துவதற்காக,  இலங்கை (அரசியலமைப்பு) அரச பேரவைக் கட்டளையின் கீழ் 1946ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க சேவை ஆணைக்குழு தாபிக்கப்பட்டது...இதற்கமைய அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் மற்றும்  பதவி நீக்கம் தொடர்பான நிறைவேற்று அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.

1972ஆம் ஆண்டில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு 26 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாக செயற்பட்டு வந்த அரசாங்க சேவை ஆணைக்குழுவை இல்லாதொழித்து அரச சேவை மீதான அதிகாரத்தை அமைச்சரவைக்கு பாரப்படுத்தியது.

பின்னர் 1978ஆம் ஆண்டில் 2ஆம் குடியரசு அரசியலமைப்பு பிரகடனத்தினால் அரசாங்க சேவை ஆணைக்குழு மீண்டும் தாபிக்கப்பட்டு அதற்கான உறுப்பினர்களின் நியமனம்,56(1)ஆம் உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.  அமைச்சரவையின் ஊடாக அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பட்டது.

1978இல் அரசாங்க சேவை ஆணைக்குழு, நியமனஙகள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் மற்றும் பதவிநீக்கம் ஆகியவற்றில் தனக்குள்ள அதிகாரங்களை அமைச்சரவைக்கு, அமைச்சு செயலாளர்களுக்கு, திணைக்களத் தலைவர்களுக்கு பகிர்ந்தளித்தது.  இவ்வேளையில் அரசாங்க சேவை ஆணைக்குழு முழு மேன்முறையீட்டு அதிகாரியாகத்தான் தொழிற்பட்டது.
[ பார்க்க: அரசியல் யாப்பு 58(1), 58(2)ஆம் உறுப்புரை ]

பின்னர் 1992இல் அமைச்சரவை, பதவிநிலை உத்தியோகத்தர்களின் (அமைச்சு செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்த) நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அதிகாரங்களை அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கையளித்ததோடு ஆணைக்குழுவினால் அல்லது ஒரு சபையினால் மேற்கொள்ளப்படும் இரத்து செய்வதற்கான அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக் கொண்டது.

அடுத்து  17ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொதுச் சேவை தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கிய 1978ஆவது அரசியல் யாப்பின் IX ஆம் அத்தியாயம் நீக்கப்பட்டு, புதிய அத்தியாயம் முன்வைக்கப்பட்டது. இத்திருத்தம் அரசாங்க சேவை ஆணைக்குழுவை பாராளுமன்றத்திற்கு மாத்திரமே பொறுப்பு கூற வேண்டிய ஒரு சுதந்திரமான அமைப்பாக மாற்றியது.

17ஆம் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 54(1) உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழு அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருக்கும்.  ஜனாதிபதி; அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஒருவரை தலைவராக நியமிக்கப்படுவார்.  அவர்கள் மூன்று வருட காலப்பகுதிக்கு பதவி வகிப்பதுடன் மேலும் ஒரு தவணைக்கு மீள் நியமிக்கப்படக் கூடிய தகைமையை பெற்றுள்ளனர்.

 

iso 9001:2008

பிந்திய செய்தி

  • கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள மருத்துவர் திரு. எஸ்.எஸ்.எம். ஷாபி அவர்களை மீண்டும் சேவைக்கு அழைத்தல் தொடர்பில் மேலும் வாசிக்க...

  • இலங்கை விஞ்ஞான சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - 2016(2018) ( நியமனத் திகதி - 2020.01.14 ) மேலும் வாசிக்க...

  • விலைமதிப்புத் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்த்தல் மேலும் வாசிக்க...

  • நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்த்தல் மேலும் வாசிக்க...

  • Decision for the transfer appeals submitted by the officers of the non academic staff of the Ministry of Education - 2019 மேலும் வாசிக்க...

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17-01-2020.

-------------------------------

அரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,

உலக வர்த்தக நிலையம்,

மேற்குக் கோபுரம்,

11 வது மாடி,

எச்சலன் சதுக்கம்,

கொழும்பு – 01.

அரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,

இல.1200/9,

இரஜமல்வத்தை வீதி,

பத்தரமுல்லை