உள்ளக கணக்காய்வுப் பிரிவு

 

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு நி.ஒ. 133 மற்றும் 2018 இல 19 தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 40 ஆம் பிரிவின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு நேரடியாக பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ள கணக்காளர் ஒருவரின் கீழ் இயங்கிவருகின்றது.

அங்கு பிரிவுத்  தலைவர் உள்ளிட்ட முகாமைத்துவ  உதவியாளர் சேவைக்குரிய உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் அலுவலக உதவியாளர் சேவையின் ஊழியர் ஒருவரையும் கொண்ட ஆளணி நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்திற்குரிய அனைத்துப் பிரிவுகளும் கல்வி மற்றும் சுகாதாரக்குழுவினதும் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தேவைக்கு ஏற்ப விசேட கணக்காய்வுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

எமது பணிகள்

  • மோசடி மற்றும் தவறுகளைத் தடுப்பதற்காக நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக கட்டுப்பாட்டு முறையின் எண்ணிக்கையளவிலான வெற்றியை கண்டறிதல்.
  • கணக்கு மற்றும் வேறு அறிக்கைகள் மூலம் சரியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றதா என்பதை தேடிப்பார்த்தல்.
  • ஆளணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்களது செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
  • நிறுவனத்திற்குரிய ஆதனங்கள் மற்றும் சொத்துக்கள் முறையாக, பாதுகாப்பாக சிக்கனத்துடன் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை தேடிப்பார்த்தல்.
  • தாபன விதிக்கோவை, நிதி ஒழுங்கு விதிகள் மற்றும் சுற்றறிக்கை ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை தேடிப்பார்த்தல்.
  • தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 41 ஆம் பிரிவு மற்றும் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய அனைத்து காலாண்டுக்கு ஒரு முறையும் நிறுவனத்தின் முகாமைத்துவ கணக்காய்வுக் கூட்டங்களை நடாத்துதல் மற்றும் அந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் முன்னேற்றம் தொடர்பில் பின்னூட்டம் செய்தல்.